சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும்: அன்புமணி இராமதாசு வலியுறுத்தல்

சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும்: அன்புமணி இராமதாசு வலியுறுத்தல்

அன்புமணி இராமதாசு

மகளிர் உரிமை தொகை கொடுப்பதற்கு சர்வே எடுத்தது போல தான், சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும்: அன்புமணி இராமதாசு வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வலியுறுத்தி பாமக சார்பில் சென்னை தியாகராய நகரில் கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மற்றும் வழக்கறிஞர்கள் மற்றும் பாமக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். இதில் பாமக தலைவர் அன்புமணி இராமதாசு பேசியவை...

சமூக நீதியின் பிறப்பிடம் தமிழகம். அப்படிபட்ட தமிழகத்தில் சமூக நீதியை நிலைநாட்ட சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என இந்த கருத்தரங்கம் நடைபெறுகிறது.

44 ஆண்டுகளுக்கு முன்பு இராமதாசு சொல்லியதை கேட்டு தமிழக அரசு ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி இருந்தால் இன்று தமிழ்நாடு தான் இந்தியாவில் முன்னேறிய மாநிலமாக இருந்திருக்கும். ஜாதி என்று சொன்னாலே கெட்ட வார்த்தை போல் பார்க்கிறார்கள். ஜாதி வாரி கணக்கெடுப்பு என்றால் அதை வைத்து அரசியல் செய்வதாக நினைக்கிறார்கள்.

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு உடன் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அன்று பிரணாப் முகர்ஜி உறுதி அளித்தார். ஆனால் அது அப்படியே போய் விட்டது. இந்தியாவில் எந்த ஒரு தலைவரும் இப்படி ஒரு அழுத்தம் கொடுத்ததில்லை. இனி கொடுக்க போவதும் இல்லை.

தமிழ்நாட்டில் உள்ள 540 ஜாதிகளின் நிலையையும் அறிந்து கொள்ள தான் ஜாதி வாரி கணக்கெடுப்பு கேட்கிறோம். இதை நாங்கள் எடுக்க மாட்டோம் எங்களால் முடியாது என்று சொல்பவர்கள் எதற்கு சமூக நீதியை பற்றி பேசுகிறீர்கள் என கேள்வி எழுப்பினார். ஜாதிகளின் எண்ணிக்கை மட்டும் தான் வரும் ஆனால் அவர்களின் குடும்ப நிலை குறித்த வராது.

மாநில அரசு ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான் ஒவ்வொருவரின் நிலை வரும். இதற்காக தான் 44 ஆண்டுகள் இராமதாசு போராடி வருகிறார்.

ஒரு ஜாதி முன்னேற்றத்திற்காக நாங்கள் இதை செய்யவில்லை. தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக தான் செய்கிறோம். ஐடி நிறுவனங்கள் கட்டினால் தமிழ்நாடு முன்னேறி விடாது. பின் தங்கிய மக்களை முன்னேற்றி விட்டால் தான் தமிழ்நாடு முன்னேறும்.

தந்தை பெரியாரின் வாரிசு நாங்கள் என்று பேசுபவர்கள், அடிப்படை சமூக நீதியை நிலைநாட்டமல் இருக்கிறார்கள்.

மாநில அரசுக்கு ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க எல்லாவிதமான அதிகாரமும் உள்ளது என முன்னாள் அரசு வழக்கறிஞர் கூறுகிறார். இதை விட என்ன வேண்டும். இத்தனை வழக்கறிஞர்கள், அறிஞர்கள் எல்லோரும் சொல்லியும் முதலமைச்சர் முக ஸ்டாலின் எங்களுக்கு அதிகாரம் இல்லை என மத்திய அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என அங்கு கடிதம் எழுதுகிறார்.

Collection of statistics act 2008 ன் படி மாநில அரசுக்கு இந்த அதிகாரம் உள்ளது என சுட்டிகாட்டினார். 10.5 சதவீதம் இட ஒதுக்கீட்டுக்கு தரவுகள் இல்லை என உச்சநீதி மன்றம் அதை ரத்து செய்து விட்டது ஆனால் 10 சதவீதம் EWS எந்தவித தரவுகள் இல்லை என்றாலும் பரவாயில்லை என்று கொடுத்து விட்டார்கள்

மாநில அரசு இது போன்று ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுத்தால் மத்திய அரசு அதில் தலையிட கூடாது என சட்டம் சொல்கிறது. மாநில அரசுக்கு அனைத்து அதிகாரமும் உள்ளது என பீகார் உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை சுட்டி காட்டி பேசினார். தரவுகள் இருந்தால் தான் சமூக நலத்திட்டங்கள் கொண்டு வர முடியும். மகளிர் உரிமை தொகை கொடுப்பதற்கு சர்வே எடுத்து 1 கோடியே 6 லட்சம் பேருக்கு கொடுத்தது போல தான் சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என கூறினார்

தமிழ்நாட்டில் அதிகமாக குடிசை உள்ள மாவட்டங்கள் வட தமிழ்நாட்டில் தான் உள்ளது. வன்னியர்களும், தாழ்த்தப்பட்டவர்களும் தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 40 சதவீதம் இருக்கிறார்கள். இவர்கள் வளர்ச்சி அடைந்தால் தமிழ்நாடு வளர்ச்சி அடையும்.

கல்வி வேலைவாய்ப்பில் கடைசி இடத்தில் இருக்கிறது ஆனால் மது விற்பனையில் முதல் இடத்தில் உள்ளது.

ஜாதி வாரி கணக்கெடுப்பு செய்யாமல் இருந்தால் தான் அரசியல் வரும் அதை செய்தால் தான் அது சமூக நீதி. 95 விழுக்காடு மக்களுக்கு ஜாதி வாரி கணக்கெடுப்பு என்றால் என்னவென்று தெரியாது சில அரசியல் கட்சி தலைவர்களுக்கும் தெரியாது என கூறினார்.

ஆனால் எங்களுக்கு இது இரத்தத்தில் ஊரி இருக்கிறது என பேசினார். தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு கொடுக்க மற்ற மாநிலங்களை பற்றி என்ன கவலை உங்களுக்கு என முதலமைச்சர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தை சுட்டி காட்டி பேசினார். இந்த ஜாதி இவ்வளவு எண்ணிக்கையில் இருக்கிறார்களா அப்போ தேர்தலில் இத்தனை இடங்கள் கொடுக்க வேண்டும் என முதலமைச்சரை சுற்றி உள்ள சிலர் அவரிடம் சொல்கிறார்கள் என கூறினார். இவ்வாறு அன்புமணி ராமதாசு பேசுனார்.

Tags

Next Story