ஆலூர் அரசுப் பள்ளியில் இந்திய மொழிகள் உற்சவம் விழா

ஆலூர் அரசுப் பள்ளியில் இந்திய மொழிகள் உற்சவம் விழா

விழாவில் கலந்து கொண்ட மாணவர்கள்

ஆலூர் அரசுப் பள்ளியில் இந்திய மொழிகள் உற்சவம் விழா நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் ஒன்றியம் ஆலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று மகாகவி பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு இந்திய மொழிகள் உற்சவம் 2023 நிகழ்வுகள் விழாவானது வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு தலைமை ஆசிரியர் ஆ.செல்வக்குமார் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர் பா.அழகம்மாள்முன்னிலை வகித்தார்.சிறப்பு விருந்தினராக திருக்கோவிலூர் CSC கம்யூட்டர்ஸ் நிறுவனர் சின்னராஜ் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கி சிறப்பித்தார்.

கணித அவதானி ஜி.ஜானகிராமன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.அதன் பின்னர் மாணவர்களுக்க இயற்கை,சுற்றுச்சூழல்,இலக்கியம்,சமையல்வகை,தனித்திறன் வெளிப்பாடு, பாரதியார் பாட்டு, பேச்சு ,பரத நாட்டிய நடனம் மற்றும் ஓவியம் போன்ற தனித்திறன் போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டி பரிசுப் பொருட்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் த.சசிக்குமார், சூ.இராபர்ட் சகாயராஜ், சு.கோவிந்தராஜ் நித்யா,ஜெயந்தி , அஞ்சலை ஆகியோர் செய்திருந்தனர். நிறைவாக ஆசிரியர் கோ.சுதா நன்றி கூறினார்.

Tags

Next Story