செல்போன் ஒட்டுக்கேட்பு - உளவுத்துறை மீது அதிமுக புகார்
இன்பதுரை
தமிழக உளவுத்துறை சட்டவிரோதமாக எதிர்க்கட்சியினரின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்பதாக அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை தலைமைத் தேர்தல் ஆணையம் மற்றும் மாநில தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், தமிழக உளவுத்துறை அதிகாரிகள் பெகாசஸ் உள்ளிட்ட மென்பொருள்களை பயன்படுத்தி எதிர்க்கட்சியினரின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்கின்றனர். எதிர்க்கட்சி தலைவர்கள், உதவியாளர்கள் மற்றும் ஓட்டுநர்களின் செல்போன் உரையாடல்களும் ஒட்டுக் கேட்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். தேர்தல் வியூகங்களை தினமும் தமிழக முதலமைச்சருக்கு தெரியப்படுத்தும் வகையில் செல்போன் ஒட்டு கேட்கப்படுகிறது எனவும். மேலும், இதற்காக இஸ்ரேலில் இருந்து 40 கோடி ரூபாய்க்கு உளவு மென்பொருள் வாங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
உளவுத்துறையின் இந்த நியாயமற்ற செயல்பாடு, நேர்மையான தேர்தல் என்ற நோக்கத்தையே சிதைக்கிறது. உளவுத்துறையின் நடவடிக்கை அரசமைப்புக்கு எதிரானது. கருத்து உரிமை சுதந்திரத்தை பறிப்பதாக உள்ளது. எனவே தமிழக உளவுத்துறை ஐ.ஜி. செந்தில் வேலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிமுக சார்பில் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டடுள்ளது.