'தமிழ்நாடு' என்ற வார்த்தையே இடம்பெறாத மத்திய பட்ஜெட்!

தமிழ்நாடு என்ற வார்த்தையே இடம்பெறாத மத்திய பட்ஜெட்!

 நிர்மலா சீதாராமன் 

நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் துவங்கிய நிலையில் இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் கூடியதை தொடர்ந்து மத்திய பட்ஜெட்டிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதனையடுத்து, மக்களவையில் இந்த ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். அப்போது பல அறிவிப்புகளை வெளியிட்டார். ஆந்திரா, பீகார் போன்ற கூட்டணி கட்சிகளின் மாநிலங்களுக்கு சிறப்பு நிதி திட்டங்களை வாரி வழங்கியுள்ளது இந்த மத்திய பட்ஜெட்..

ஆனால் ஒவ்வொரு பட்ஜெட்டின் போதும் தமிழ், தமிழ் என முழங்கிய பாஜக அரசின் பட்ஜெட்டில் இந்த முறை அதுகுறித்த வாடையே இல்லாமல் இருந்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பட்ஜெட் அறிவிப்பிலும் சரி, அரசியல் மேடைகளிலும் சரி தமிழ் மீதான ஆர்வத்தை கொட்டும் மோடி அரசு தமிழ்நாடு என்ற மாநிலத்தை மறந்துள்ளது.

தமிழ்நாட்டு மக்கள் பெரிதும் எதிர்பார்த்த சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், தாம்பரம் - செங்கல்பட்டு விரைவுச் சாலை திட்ட ஒப்புதல், மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான ஒப்புதல் என எதுவும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. இதனால் தமிழ்நாட்டு மக்கள் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Tags

Next Story