அரியலூரில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்த துணை ராணுவ படை

அரியலூரில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்த துணை ராணுவ படை

அரியலூரில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்த துணை ராணுவ படைக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.


அரியலூரில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்த துணை ராணுவ படைக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

அரியலூர், ஏப்.6- ஜெயங்கொண்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்துள்ள துணை ராணுவ படையினரை அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வரவேற்றார் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பொதுமக்கள் எவ்வித அச்சமும் இன்றி வாக்களிக்க தேர்தல் பாதுகாப்பு பணிக்கு துணை ராணுவ படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இதனை ஒட்டி தேர்தல் பாதுகாப்பு பணிக்காக அரியலூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள 27 வது பட்டாலியன் E கம்பெனி ஆய்வாளர் அரவிந்த் மோரியா தலைமையிலான 90 பேர் கொண்ட குழுவினர் ஜெயங்கொண்டத்திற்கு வந்துள்ளனர்.அவர்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தலைமையில் மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் இனிப்புகள் வழங்கி வரவேற்றனர் இவர்கள் ஜெயங்கொண்டம் மாடர்ன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு இராமச்சந்திரன், மாடர்ன் கல்வி நிறுவனத் துணைத் தலைவர் எம்.கே.ஆர்.சுரேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மதிவாணன், (போக்குவரத்து) ஆண்டிமடம் முத்துக்குமார், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் நந்தகுமார் நடேசன் உள்ளிட்ட போலீசார் உடன் இருந்தனர்.

Tags

Next Story