தமிழகத்திற்கு மத்திய அரசு கேட்ட நிதியைக் கொடுக்கவில்லை - துரை வைகோ

தமிழகத்திற்கு மத்திய அரசு கேட்ட நிதியைக் கொடுக்கவில்லை - துரை வைகோ

  பாதிப்பு காலத்தில் அதிமுக ஆட்சியிலும் மத்திய அரசு கேட்ட நிதியை கொடுக்கவில்லை என துரை வைகோ குற்றம் சாட்டியுள்ளார்

பாதிப்பு காலத்தில் அதிமுக ஆட்சியிலும் மத்திய அரசு கேட்ட நிதியை கொடுக்கவில்லை என துரை வைகோ குற்றம் சாட்டியுள்ளார்

மறுமலர்ச்சி திமுக திருச்சி மாநகர் மாவட்ட, வடக்கு மாவட்டம், திருச்சி தெற்கு மாவட்டம் நாடாளுமன்ற தேர்தல் கலந்தாய்வு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே இன்று நடைபெற்றது.

இந்த கலந்தாய்வு கூட்டத்தில் மதிமுக முதன்மை செயலாளர் துறை வைகோ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய துறை வைகோ கூறுகையில்..., மதிமுகவின் பலம் என்பது தொண்டர்கள் தான். பாராளுமன்ற தேர்தலில் மதிமுக -விற்கு எத்தனை தொகுதி என்பதை தலைமை கழகம் முடிவு செய்யும். எங்களுடைய கூட்டணி கட்சி திமுக எடுக்கும் முடிவை பொறுத்து முடிவு செய்யப்படும். 5 முதல் 6 தொகுதிகள் வேண்டும் என்று மதிமுக தொண்டர்கள் விரும்புகின்றனர். பல தேர்தல்களில் திருச்சியில் மதிமுக வெற்றி பெற்று உள்ளது. திருச்சியில் மதிமுக போட்டியிடுவது என்பது, தலைமை தான் முடிவு எடுக்கும். தேசிய பேரிடர் நிதி யை முடிவு செய்வது மத்திய அரசு. 12,000 கோடி ஒதுக்க வேண்டும் என்றால் அதில் 9000 கோடி மத்திய அரசு, 300 கோடி மாநில அரசு கொடுக்க வேண்டும். நிஜாம் புயல் சேதாரம் 19000 கோடி . ஆனால் மத்திய அரசு 1000 கோடி கொடுத்துள்ளனர்.

கடந்த வருட நிதியை செலவு செய்யவில்லை என கூறுகின்றனர். ஆயில் கசிவு காரணமாக, 22 மீனவ கிராமங்கள் பாதித்துள்ளது. ஆயில் கசிவு மூலம் படகுகள், கரையோரங்கள், பாதிக்கப்பட்டு உள்ளது. புதிய படகு வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைக்கின்றனர். மழை பாதிப்பில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு மட்டுமே 10 ஆயிரம் கோடி தேவைப்படும். வீடு, உடமை, கால்நடை அனைத்தும் பாதிப்படைந்து உள்ளது. தேசிய பேரிடர் என அறிவிக்க முடியாது என மத்திய அரசு கூறி உள்ளது. ஒதுக்க வேண்டிய நிதி யையும் இன்னும் அறிவிக்காமல் உள்ளது. இதெல்லாம் வேண்டுமென்றே மத்திய அரசு செய்வதாக சந்தேகம் உள்ளது.

அதிமுக ஆட்சியில் வந்த மழை பாதிப்பில் 17000 கோடி கேட்டதில் 5000 கோடி கொடுத்துள்ளனர். அதிமுக ஆட்சியில் கூட கேட்ட நிதியை மத்திய அரசு கொடுக்கவில்லை. பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்காமல் உள்ளனர். பல விசயங்களில் ஆளுனருடைய செயல்பாடுகளால் பலரின் வேலை பறிபோய் உள்ளது. முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி வெள்ள பாதிப்புக்கு தமிழக அரசு அதிகாரிகள் முழு வீச்சில் செயல்பட்டு உள்ளனர். முதலமைச்சர் அனைத்து இடத்திலும் இருக்க முடியாது என கூறினார்.

Tags

Next Story