13 பேர் இடமாற்றம் - ஒன்றிய அரசு உத்தரவு ரத்து
மத்திய அரசு உத்தரவு ரத்து
சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி இணை பேராசிரியர்கள் 13 பேரை இடமாற்றம் செய்த ஒன்றிய அரசின் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. 13 இணை பேராசிரியர்கள் தொடர்ந்த வழக்கில் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் சென்னை அமர்வு உத்தரவிட்டது. புதிய இடமாற்ற கொள்கை அடிப்படையில் விருப்பங்கள், முன்னுரிமைகளை கருத்தில் கொள்ளாமல் இடமாற்றம் செய்த உத்தரவுகளை எதிர்த்து 13 இணை பேராசிரியர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
அதில் 2022 ஆம் ஆண்டு அறிமுகம் செய்த பணியிட மாறுதல் கொள்கை நடைமுறைகளை பின்பற்றாமல், இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது; இடமாறுதல் செய்யப்பட்ட பகுதிகளில் பணிக்கு சேராததை காரணம் காட்டி மனுதாரர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என தீர்ப்பாயம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சட்டப்படி நியாயமான முறையில்தான் பணியிட மாற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன ஒன்றிய அரசு தரப்பு தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி இணை பேராசிரியர்கள் 13 பேரை இடமாற்றம் செய்த ஒன்றிய அரசின் உத்தரவை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார். பணியிட மாறுதல் கொள்கையை பின்பற்றி ஒரு மாதத்தில் பணியிட மாற்ற பணிகளை மீண்டும் மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்.