மழை வெள்ள பாதிப்பு குறித்து மத்திய குழுவினர் ஆய்வு

மழை வெள்ள பாதிப்பு குறித்து மத்திய குழுவினர் ஆய்வு

பைல் படம் 

தூத்துக்குடி மாநகரில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளம் காரணமாக தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில் மழை வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக நான்கு பேர் கொண்ட மத்திய குழுவினர் வருகை-அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம் மற்றும் மாநகரில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த முன்பு பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டம் மற்றும் மாநகரின் பல்வேறு பகுதியில் குடியிருப்புகள் வெள்ளம் சூழ்ந்து தண்ணீர் வடியாமல் உள்ளது இதன் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய அரசு சார்பில் நான்கு பேர் கொண்ட மத்திய குழு அனுப்பப்பட்டுள்ளது. இந்த குழுவில் உள்ள அதிகாரிகள் விஜயகுமார் தங்கமணி டாக்டர் பொன்னுச்சாமி மற்றும் விகேசிங் காலை 10 மணிக்கு தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் வந்து தமிழக அரசின் கூடுதல் வருவாய் செயலாளர் பிரபாகரன் தலைமையில் அனைத்து துறை அரசு அதிகாரிகளுடன் ஆய்வு செய்து வருகின்றனர். ஆய்வு செய்ய வந்துள்ள மத்திய குழுவினருக்கு தூத்துக்குடி மாநகரில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து காணொளி மூலம் அதிகாரிகள் விளக்கி வருகின்றனர் மேலும் இதைத் தொடர்ந்து மத்திய குழுவினர் நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்ய உள்ளனர்.

Tags

Next Story