அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு சுற்றுச்சூழல் மேலாண்மை சான்றிதழ்

X
அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு சுற்றுச்சூழல் மேலாண்மை சான்றிதழ்
தேசிய அங்கீகார வாரியம் ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்ட டி.யு.வி.- எஸ்.யு.டி.வினால் தரச்சான்றிதழ் பெற்ற முதல் நிறுவனம் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைதான்
இந்தியாவின் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு, சான்றிதழ் அமைப்புகளுக்கான தேசிய அங்கீகார வாரியம் ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்ட தெற்கு ஆசியா கல்வி நிறுவனங்களின் சுற்றுச்சூழல் மேலாண்மை சார்ந்த நடவடிக்கைகளை ஆராய்ந்து அவற்றுக்கான தரச்சான்றிதழை வழங்குகிறது. அதன் அடிப்படையில் விநாயகா மிஷனின் விம்ஸ் ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் கல்வி, பயிற்றுவித்தல், ஆய்வகம் மற்றும் நிர்வாகம் போன்ற அனைத்து பிரிவுகளிலும் சுற்றுச்சூழல் மேலாண்மை சார்ந்த நடவடிக்கைகளை ஆராய்ந்து தரச்சான்றிதழை வழங்கி உள்ளது. இந்தியாவிலேயே இந்த தரக்கட்டுப்பாட்டு அமைப்பு, தேசிய அங்கீகார வாரியம் ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்ட டி.யு.வி.- எஸ்.யு.டி.வினால் தரச்சான்றிதழ் பெற்ற முதல் நிறுவனம் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைதான். இதற்காக துறையின் டீன் செந்தில்குமாரை பல்கலைக்கழக வேந்தர் கணேசன், துணைத்தலைவர் அனுராதா கணேசன் ஆகியோர் பாராட்டினர்.
Next Story
