அரிச்சல் முனையில் சவாலான கயாக் பயணம்

இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள் ராமேஸ்வரம் தீவை சுற்றி வரும் சவாலான கயாக் பயணம் அரிச்சல் முனையில் நடைபெற்றது.

ராமநாதபுரம் கடலோர காவல் படை பணியாளர்களிடையே சாகச உணர்வை ஊக்குவிக்கும் பொருட்டு கடலோர பாதுகாப்பு, நிலையான மீன்பிடி நடைமுறைகள், மற்றும் கடலில் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை கடலோர மக்களிடையே பரப்புவதற்கும் இந்திய கடலோர காவல் படை குழு ராமேஸ்வரம் தீவை சுற்றிவரும் சவாலான கயாகிங் பயணத்தை தொடங்கியுள்ளது.

இது மூன்று நாட்களில் 80 கிலோமீட்டர் கடலில் கயாக் பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் இந்தியா கடலோர காவல் படை, ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து இந்த பயணத்தை ஏற்பாடு செய்துள்ளது மேலும் குவெஸ்டு அட்வென்சர்ஸ் அகாடமி மற்றும் ஓசன் அம்பாசிடர் அறக்கட்டளை மூலம் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் துவக்க நாளான இன்று பிப்ரவரி 19ஆம் தேதி காலை 10 மணி அளவில் இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள் இருவரும் குவெஸ்டு அட்வென்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சேர்ந்த ஒருவரும் மொத்தம் மூன்று பேர் ராமேஸ்வரம் அரிச்சல் முனையில் இருந்து ஓலைகுடா வரை சுமார் 27 கிலோமீட்டர் கயா கிங் பயணம் மேற்கொண்டனர் தனுஷ்கோடி அரிச்சல் முனையில் இருந்து ஓலை கூட வரை கடல் பயணத்தை கயாக்கிங் கடக்க இவர்கள் 7 மணி நேரம் எடுத்துக் கொண்டனர்.

இரண்டாவது நாளாக பிப்ரவரி 20ஆம் தேதி நாளை ஓலைகுடாவில் இருந்து குந்து கால் வரை கயாக்கிங் பயணம் நடைபெற உள்ளது அதனைத் தொடர்ந்து மூன்றாவது நாளாக பிப்ரவரி 21ஆம் தேதி குந்துகாலில் இருந்து அரிச்சல் முனை வரை பயணித்து சாகச பயணம் நிறைவு செய்ய உள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story