தமிழகத்தில் நாளை 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல் !

தமிழகத்தில் நாளை 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல் !

கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் நாளை 14 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. கோடை வெயில் துவங்கியதிலிருந்து தமிழகத்திலிருந்து கடந்து சில தினங்களாகவே வெயில் சுட்டெரித்து வருகிறது.

மேலும் பகல் நேரங்களில் வெப்ப அலை வீசுவதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே தலை காட்ட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இது போதாது என்று தற்போது மே நான்காம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் துவங்கியுள்ளதால் வெயிலின் உக்கிரம் மிகக் கொடுமையாக உள்ளது.

இதனால் பல இடங்களில் கடும் தண்ணீர் பஞ்சமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொளுத்தும் வெயிலில் இருந்து ஒரு பிரேக் கொடுக்க தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டது.

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் நீலகிரி, கோவை ,திருப்பூர், தேனி ,திண்டுக்கல், விருதுநகர் ,தென்காசி, திருநெல்வேலி, ஈரோடு ,சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ,வேலூர் ,மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

நாளை மறுநாள் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை நிலவும் மே 8 முதல் 11ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு இரண்டு செல்சியஸ் வரை அதிகபட்ச வெப்பநிலை குறையக்கூடும்.

மேலும் குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னர் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளி காற்று வீச கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். என்று தெரிவித்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story