எடப்பாடி பழனிச்சாமி பிரச்சார சுற்றுப்பயணத் திட்டத்தில் மாற்றம்.
எடப்பாடி பழனிச்சாமி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் தேர்தல் பிரச்சார பயணத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சார சுற்றுப்பயணத்தில் மார்ச் 28ஆம் தேதி மற்றும் ஏப்ரல் 8 ஆம் தேதிகளுக்கான சுற்றுப்பயண திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மார்ச் 28ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி பாவாடை தோப்புத்திடல் சிவகாசி பகுதியில் பொதுக்கூட்டமும், தொடர்ந்து, இரவு 7 மணிக்கு மதுரை நாடாளுமன்ற தொகுதி ஜெயம் தியேட்டர் அருகில் பழங்காநத்தம் மதுரை பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. ஏப்ரல் 8 ஆம் தேதி திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி காரைக்குடி பகுதியில் பொதுக்கூட்டமும், இரவு 7 மணிக்கு இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி இராமநாதபுரம் அரண்மனை பகுதியில் பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது.
Next Story