மாணவி தற்கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

மாணவி தற்கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

மாணவி தற்கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்

மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர். 
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் சுகிர்தா. குலசேகரம் ஸ்ரீமுகாம்பிகா மருத்துவ கல்லூரியில் படித்து வந்த இவர் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 6-ந்தேதி கல்லூரி விடுதியில் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இந்நிலையில் தற்கொலை செய்த மாணவி எழுதி வைத்திருந்த கடிதத்தில் பேராசிரியர் பரமசிவம் உடன் படிக்கும் மருத்துவ மாணவர்கள் ஹரீஷ் மற்றும் பிரீத்தி ஆகியோர் எனது மரணத்திற்கு காரணம் என கூறியிருந்தார். அதன் அடிப்படையில் குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் மாணவியின் பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தான் விசாரிக்க வேண்டும் கோரிக்கை விடுத்ததின் அடிப்படையில் தமிழக அரசு சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க உத்தரவு போட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் பேராசிரியர் பரமசிவத்தை கைது செய்து அவரிடம் இருந்த செல்போன் மற்றும் லேப்-டாப்பை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி கைது செய்தனர். அவர் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார். அதுபோல் ஹரீஷ் மற்றும் பிரீத்தி ஆகியோர் முன்ஜாமீன் பெற்று வெளியே உள்ளனர். தற்போது 137 நாட்கள் கடந்த நிலையில் இந்த வழக்கு சம்பந்தமாக 150 பேரிடம் நேரடி விசாரணை நடத்தினர். பின் பரமசிவம், ஹரீஷ் ப்ரீத்தியிடம் கைப்பற்றப்பட்ட செல்போன், லேப்டாப் அதன் விபரங்களை சென்னையில் உள்ள லேபில் அனுப்பி அதன் விபரங்களை சேகரித்து வருகின்றனர். லேப்டாப்பில் உள்ள முழு விவரங்கள் விரைவில் கிடைத்துவிடும். அதன் பிறகு கோர்ட்டில் இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர். இந்த குற்றப்பத்திரிகை மூலம் மாணவி சுகிர்தா மரணத்தில் நீதி கிடைக்கும் என அவரது தந்தை மற்றும் உறவினர்கள், சமூக ஆர்வலர்கள் காத்திருக்கிறார்கள்.

Tags

Next Story