வில்வநாதீஸ்வரர் கோவிலில் தேரோட்டம்

வில்வநாதீஸ்வரர் கோவிலில் தேரோட்டம்

வில்வநாதீஸ்வரர் கோவிலில் தேரோட்டம்

காட்பாடி அருகே உள்ள வில்வநாதீஸ்வரர் கோவிலில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த திருவலம் பேரூராட்சியில் பொன்னை ஆற்றங்கரையில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான தனுமத்யம்பாள் வில்வநாதீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் சாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். நேற்று(22.03.2024) அலங்கரிக்கப்பட்ட மரத்தேரில் தனுமத்யம்பாள் உடனுறை வில்வநாதீஸ்வரர் உற்சவரை வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

தொடர்ந்து அமைச்சர் ஆர்.காந்தி, ஜெகத்ரட்சகன் எம்.பி. ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.அதைத்தொடர்ந்து பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர். முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்த தேரின் மீது பக்தர்கள் உப்பு, மிளகு ஆகியவைகளை வீசி நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story