சென்னையில் நான்கு வழித்தட உயர்மட்டச் சாலை பணி:முதல்வர் தொடங்கி வைப்பு

சென்னையில் நான்கு வழித்தட உயர்மட்டச் சாலை பணி:முதல்வர்  தொடங்கி வைப்பு

கட்டுமான பணியை தொடக்கி வைத்த முதல்வர்

தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 621 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள நான்கு வழித்தட உயர்மட்டச் சாலை கட்டுமானப் பணியை முதல்வர் தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நெடுஞ்சாலைத் துறை சார்பில் சென்னை, சைதாப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 621 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3.20 கி.மீ. நீளத்திற்கு கட்டப்படவுள்ள நான்கு வழித்தட உயர்மட்டச் சாலை கட்டுமானப் பணியை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் வேலு, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன். சட்டமன்ற உறுப்பினர் கணபதி. துணை மேயர் மகேஷ் குமார். நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், தலைமை பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) ஆர். சந்திரசேகரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story