மருத்துவர் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது
கோப்பு படம்
ஸ்டிக்கர் ஒட்டுவதில் விலக்கு அளிக்கக்கோரி தமிழ்நாடு மருத்துவர்கள் நலச் சங்கத்தின் பொதுச்செயலாளர் மருத்துவர் கே.ஸ்ரீனிவாசன் மனு அளித்திருந்தார். மருத்துவ அவசரத்திற்காக செல்லும் மருத்துவர்களுக்கு ஸ்டிக்கர் ஒட்ட விலக்களிக்கலாமே ? என நீதிபதி கேள்வி எழுப்பினார். ஸ்டிக்கர் ஒட்டுவதை தவறாக பயன்படுத்தினால் காவல் துறை நடவடிக்கை எடுக்கலாம் எனவும் உத்தரவிட்டுள்ளது.
வழக்கறிஞர்களுக்கு பார் கவுன்சில் ஸ்டிக்கர் வழங்குவது போல மருத்துவர்களுக்கும் வழங்குவது குறித்து தேசிய மருத்துவ ஆணையத்திடன் கருத்து கேட்கலாமே? என்றும் நீதிபதி தெரிவித்தார். தேசிய மருத்துவ ஆணையத்தையும், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலையும் வழக்கில் இணைக்க மனுதாரருக்கு உத்தரவிட்டு விசாரணை ஜூன் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. வாகனத்தின் முன் பக்கம் அல்லது பின் பக்கம் மட்டுமே ஸ்டிக்கர் ஒட்டியிருக்க வேண்டும். நம்பர் பிளேட் உள்ளிட்ட இடங்களில் ஒட்டியிருந்தால் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிபதி தெரிவித்தார்.