சென்னை மீனம்பாக்கத்தில் 82 கி.மீ. வேகத்தில் வீசிய காற்று - வானிலை ஆய்வு மையம்

சென்னை மீனம்பாக்கத்தில் 82 கி.மீ. வேகத்தில் வீசிய காற்று - வானிலை ஆய்வு மையம்

வானிலை ஆய்வு மையம்

50 - 60 கி.மீ வேகம் வரையிலும், அவ்வப்போது 70 கி.மீ வேகம் வரையும் தரைக்காற்று வீசும் என முன்னதாக கணிக்கப்பட்டது.

கணிக்கப்பட்டதை விடவும் அதிகமாக மீனம்பாக்கத்தில் 82 கி.மீ. வேகத்தில் வீசிய காற்று.

மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக இதுவரை 25 செ.மீ. மழைப்பொழிவு பதிவு.

சென்னையில் விமான சேவை 2 மணிநேரம் நிறுத்தம்.

சென்னை விமான நிலையத்தில் காலை 9.40 மணி முதல் 11.40 மணி வரை விமான சேவை நிறுத்தம்

மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை பெய்து வருவதால் சென்னையில் விமான போக்குவரத்து பாதிப்பு; விமான நிலைய ஓடுதளத்தில் மழைநீர் தேங்கியதால் விமான சேவையில் சிக்கல்

மிக்ஜாம் புயல் இன்று முற்பகல் தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. மழை மற்றும் காற்று இன்று இரவு வரை தொடர வாய்ப்புள்ளது

பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பாதுகாப்பாகவும் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story