உலகிலேயே பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் சென்னைக்கு முதல் இடம்

உலகிலேயே பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் சென்னைக்கு முதல் இடம்

சென்னை

இந்தியாவில் பெண்கள் வேலைபார்க்க மிகவும் பாதுகாப்பான நகரங்களின் பட்டியலை சேப்டி இன்டெக்ஸ் என்ற தனியார் ஆய்வு நிறுவனம் வெளியிட்டது. பாதுகாப்புசூழல் ,போக்குவரத்து வசதி, பணி வாய்ப்புகள், சமத்துவம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாக கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது. இதன் அடிப்படையில் சென்னை நகரம் முதலிடம்பிடித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் பாதுகாப்பு 60 சதவீதமாகவும், குற்ற அளவு 40 சதவீதமாகவும் உள்ளது. இதன் அடிப்படையில் இந்தியாவின் பெருநகரங்களில் மிகவும் பாதுகாப்பான மெட்ரோ நகரம் என்ற வரிசையில் சென்னை இடம் பிடித்துள்ளது.

உலகளவில் குற்றங்கள் அதிகம் நடைபெறும் நகரங்கள் பட்டியலில் வெனிசுலாவின் கராகஸ், முதலிடத்தை பெற்றுள்ளது.

முதல் 10 இடங்களில் பிரேசிலின் 4 நகரங்கள், தென்ஆப்பிரிக்காவின் 3 பகுதிகள்பிடித்துள்ளன. 100 இடங்களில் டில்லி 72 வது இடத்தையும், நொய்டா 93 வது இடத்தை பிடித்துள்ளது. பாக்.,கின் கராச்சி நகரம் 96 வது இடத்தை பிடித்துள்ளது. இதில் சென்னை 208வது இடத்தில் உள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story