சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வு வழக்கில் ஏப்.24 ல் உத்தரவு.

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வு வழக்கில் ஏப்.24 ல் உத்தரவு.
பைல் படம் 
சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழு பிரதிநிதி இடம் பெறாததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஏப்ரல் 24 ஆம் தேதியன்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க உள்ளது.
தமிழக அரசு பிறப்பித்த தேடுதல் குழு நியமித்த அரசாணையை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர் ஜெகன்நாத் வழக்கு தொடர்ந்தார். பல்கலைக்கழக மானியக் குழு பிரதிநிதியையும் சேர்த்து ஆளுநர் நியமித்த தேடுதல் குழுவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளோம் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story