முதலமைச்சர் விளம்பரம் தேடிக் கொண்டிருக்கிறார்- ஆர் பி உதயகுமார்

முதலமைச்சர்  விளம்பரம் தேடிக் கொண்டிருக்கிறார்- ஆர் பி உதயகுமார்

முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் 

தென் மாவட்ட மக்களை போர்க்கால அடிப்படைகளை மீட்டெடுக்க வேண்டிய முதலமைச்சர் கோவையில் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேறறு விளம்பரம் தேடிக் கொண்டிருக்கின்றார் - அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் குற்றச்சாட்டு

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறியதாவது, தென் மாவட்டம் மழைநீரிலே, வெள்ளநீரிலே தத்தளித்துக் கொண்டிருக்கிறது. திருநெல்வேலி தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலே கனமழை எச்சரிக்கை 17.12.2023, 18.12.2023 ஆகிய இரண்டு நாட்கள் தென் தமிழ்நாடு மற்றும் அதனை அடுத்துள்ள வட தமிழ்நாடு கடலோரப் பகுதிகள் குமரிக்கடல், மன்னார் வளைகுடா இலங்கை மற்றும் தென் கேரளா பகுதிகளில் ஒட்டி உள்ள தென்மேற்கு வங்ககடல் பகுதிகளிலே மணிக்கு 40 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருந்தது.

இந்த எச்சரிக்கையை தொடர்ந்து அரசு என்ன செய்திருக்க வேண்டும்? முழு வீச்சிலே அரசு இயந்திரத்தை களத்தில் இறக்கி இருக்க வேண்டும். தலைநகரில் இருந்தோ அல்லது களத்தில் இருந்தோ கண்காணிக்க வேண்டிய முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கோவையிலே இன்றைக்கு அரசு விழாவை தான் நடத்திக் கொண்டிருக்கிறார். அது மக்களுக்கான விழாதான் ஆனால் அதனை நடத்துவதற்கு என்று ஒரு நேரமும் காலமும் உரிய காலத்திலே உரிய நேரத்திலே மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பதிலே யாருக்கும் எந்த விதமான மாற்று கருத்து இல்லை. ஆனால் கொட்டுகிற மழையில் தத்தளித்துக் கொண்டு வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து கொண்டு வாழவே வழியில்லாமல் கண்ணீரோடு அங்கே துன்பத்திலே, துயரத்திலே, துன்பக் கடலிலே, துயரக் கடலிலே கண்ணீர் கடலிலே தத்தளிக்கின்ற மக்களை விட்டுவிட்டு இங்கே நான் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறேன் என்று விளம்பரம் தேடுவதிலே விடியா திமுக அரசு எப்படி கவனம் செலுத்துகிறது என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி.

இந்த விழாவை கோவையிலே ஒரு நாள் தள்ளி வைத்து விட்டால் ஒன்றும் குடி முழுகிப் போகாது என்று மக்கள் சொல்கிறார்கள். ஆகவே களத்திலே இன்றைக்கு ஆற்ற வேண்டிய பணிகளை மறந்துவிட்டு விளம்பரத்திற்காக இன்றைக்கு அரசு நிகழ்ச்சியில் நடத்துவதிலே தான் முதலமைச்சர் கவனம் செலுத்துகிறார் என்பதற்கு இது ஒரு சாட்சியாக இருக்கிறது. இன்றைக்கு அரசு இயந்திரம் முழுமையாக அந்த பகுதியிலே செயல்படுகிறதா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. மீட்பு பணிகளுக்கு தேவையான மீட்டு படகுகள் அங்கு இல்லை என்றும் பள்ளி கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டு அதற்கான முகாம்களாக அதை உருவாக்கப்பட்டு இருக்கிறதா? நிவாரண முகாம்களாக தயார் செய்யப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

ஆகவே நிவாரண முகாம்கள் தயார் நிலையில் இருக்கிறதா என்ற நிலையை பார்க்கிற பொழுது இல்லை என்ற பதில்தான் வருகிறது. நிவாரண முகாம்களில் உணவு, குடிநீர், பாதுகாப்பு, மருத்துவம் போன்ற வசதிகளை வசதிகளை ஏற்படுத்தவில்லை குழந்தைகளுக்கு பால் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தவில்லை, தாழ்வான பகுதிகளில் மண்டல குழுக்கள் தயார் நிலையில் இல்லை, தாழ்வான பகுதிகளில் முற்றிலுமாக வெள்ளம் சூழ்ந்து கடல் போல் காட்சி அளிக்கிற நிலைதான் நம் ஊடகங்களில் பார்க்கிறோம்.

ஆகவே போர்க்கால அடிப்படைகளை தென் மாவட்ட மக்களை மீட்டெடுக்க வேண்டிய முதலமைச்சர் கோவையில் அரசு நிகழ்ச்சிகளில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறேன் என்று விளம்பரம் தேடிக் கொண்டிருக்கின்றார்கள். அமைச்சர்கள் முகாமிட்டு இருக்கிறார்கள் என்ற செய்திகளை பார்க்கிறோம் ஆனால் முழு வீச்சிலே அங்கு அரசு இயந்திரம் மீட்பு பணிகளிலே ஈடுபடவில்லை. இன்று முழுவதும் மழை இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள். நேற்று தொடங்கிய அந்த மழை முற்றிலுமாக ரயில்வே நிலையங்கள் பேருந்து நிலையங்கள் எல்லாம் நீரில் மூழ்கி இருக்கிறது அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது உணவுக்கு அங்கே பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. குடிநீருக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வெள்ள நீரோடு, மழை நீரோடு சாக்கடை கழிவு நீர் கலப்பதனாலே துர்நாற்றம் வீசுகிறது. இது போன்ற ஒரு நிலையை இந்த அரசு எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது. மழையை நாம் நிறுத்த முடியாது. மழை நீரை நாம் நிறுத்த முடியாது. ஆனால் அதில் ஏற்படுகின்ற அந்த பாதிப்புகளை நாம் குறைக்க முடியும் அதற்கு அரசு இயந்திரம் முழுமூச்சாக செயல்பட வேண்டும். ஏனென்றால் தன்னார்வலர்கள் உடனடியாக போர்க்கால அடிப்படையில் செயல்பட முடியாது. தேசிய பேரிடர் மீட்பு படை கூட அங்கே வந்து விட்டார்கள். ஆனால் மாநில பேரிடர் மீட்புபடை உரிய உத்தரவுக்காக இன்னும் காத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது எது உண்மை என்று நமக்குத் தெரியவில்லை பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள், அமைச்சர்கள் அங்கே முகாமிட்டிருந்தாலும் கூட அரசு இயந்திரம் ஒரு முழுமுச்சாக செயல்பட்டு போர்க்கால அடிப்படையில் கண்ணீர் கடலில் தத்தளிக்கின்ற தென்மாவட்ட மக்களை மீட்டெடுக்க வேண்டும் என்பது தென் மாவட்ட மக்களின் கோரிக்கையாக இருக்கிறது மீட்டெடுப்பாரா முதலமைச்சர் அல்லது இதிலும் விளம்பரம் தேடுவாரா என கூறினார்.

Tags

Next Story