ஆளுநர் விருந்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கிறார்

ஆளுநர் விருந்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கிறார்

 ஸ்டாலின்

ஆளுநர் தேநீர் விருந்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பார் உள அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்து உள்ளார்.

முழுவதும் இன்று 78வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாலகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தின விழாவையொட்டி தமிழக ஆளுநர், அனைத்துக் கட்சிகளுக்கும் தேநீர் விருந்து வைப்பது வழக்கம். அந்தவகையில் நடப்பாண்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அனைத்துக் கட்சிகளுக்கும் ஆளுநர் மாளிகையில் இன்று தேநீர் விருந்து வைக்கிறார். இதனை முன்னிட்டு தேநீர் விருந்தில் பங்கேற்கும்படி திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக , விசிக, கம்யூனிஸ்ட், மதிமுக உள்பட் அனைத்துக் கட்சிகளுக்கும் ஆளுநர் மாளிகை தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

அரசியல் கருத்து என்பது வேறு, அரசின் நிலைப்பாடு என்பது வேறு; ஆளுநரின் கருத்தியல் சார்பான விஷயங்களில் மாறுபட்ட கருத்துகள் திமுகவிற்கு உள்ளது. இதனால் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தனர்.

பின்னர் ஆளுநர் பொறுப்பிற்கு மதிப்பளிக்கும் வகையில் தேநீர் விருந்தில் அரசு சார்பில் பங்கேற்கிறோம் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்..


Tags

Next Story