முதலமைச்சர் ஸ்டாலின் ஆகஸ்ட் 22ஆம் தேதி அமெரிக்கா பயணம் !

முதலமைச்சர் ஸ்டாலின் ஆகஸ்ட் 22ஆம் தேதி அமெரிக்கா பயணம் !

மு.க.ஸ்டாலின்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 22ஆம் தேதி அமெரிக்கா செல்லவுள்ளார். தொழில் முதலீடுகளை ஈர்க்கும்விதமாக அவரது அரசுமுறைப் பயணம் அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் வெளிநாடு செல்ல, மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டது. 15 நாட்கள் வெளிநாடு சென்று வர, மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

அமெரிக்கா பயணத்தின் போது கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் உயர் அதிகாரிகளையும் சந்திக்க இருப்பதாக தகவல் தெரிகிறது.

அவர் வெளிநாடு செல்வதற்கு முன், தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கலாம்; உதயநிதி துணை முதல்வராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

Tags

Next Story