போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிர படுத்த காவல்துறைக்கு முதலமைச்சர் வலியுறுத்தல்

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிர படுத்த காவல்துறைக்கு முதலமைச்சர் வலியுறுத்தல்

முதல்வர் ஸ்டாலின்

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிர படுத்த வேண்டும் என்று காவல்துறை உயர் அதிகாரிகள் கூட்டத்தில் முதலமைச்சர் வலியுறுத்தினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை ஒழிக்கும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தீவிர படுத்தி வரக்கூடிய நிலையில் இது குறித்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை குறித்து முதலமைச்சர் இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

துறை வாரியாக செயல்திட்டங்களை ஒருங்கிணைத்து போதை பொருள் பயன்பாட்டிற்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது. மேலும் தமிழகம் முழுவதும் போதைப்பொருள் நடமாட்டம் தொடர்பாகவும் மாவட்ட வாரியாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிகாரிகளிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார்.

இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் முருகானந்தம், காவல்துறை சார்பில் டி.ஜி.பி. சங்கர் ஜிவால், கூடுதல் டி.ஜி.பி. (சட்டம் ஒழுங்கு) அருண், சென்னை போலீஸ் கமிஷனர் சந்திப்ராய் ரத்தோர் மற்றும் காவல்துறை, அரசு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story