முதல்வர் முடிவெடுப்பார்- கனிமொழி

மீண்டும் நான் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என கனிமொழி கூறினார்.
உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலித்திட வேண்டிய தமிழ்நாட்டின் கருத்துக்கள் என்ற தலைப்பில் தூத்துக்குடியில் திமுகவின் நாடாளுமன்ற தேர்தலுக்கான கனிமொழி எம்பி தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் பல்வேறு தரப்பினரிடம் கருத்துக்களை கேட்டனர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்பி, முதற்கட்டமாக இன்று தூத்துக்குடி, விருதுநகர், இராமநாதபுரம் மாவட்டதை சார்ந்தவர்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது.
இன்று கலந்துகொண்ட தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்தவர்கள் உப்பு தொழில் வளர்ச்சி தொடர்பாகவும், இராமநாதபுரம் பகுதியினர் வத்தல் தொடர்பான கோரிக்கையும் விருதுநகர் மாவட்டத்தினர் பட்டாசு தொழில் தொடர்பாகவும் கருத்துகளை தெரிவித்துள்ளனர். இன்று தொடங்கப்பட்டுள்ள இந்த தேர்தல் அறிக்கை குழு 10-மாவட்டங்களுக்கு நேரில் சென்று அங்குள்ள பல்வேறு தரப்பினரிடம் கருத்துகளை கேட்டு விரைவில் தமிழக முதல்வரிடம் சமர்பிக்கப்படும்.
மீண்டும் நான் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போடியிடுவது தொடர்பாக முதல்வரை தவிர யாராலும் முடிவு செய்ய முடியாது எனவே முதல்வர் அறிவித்த பின்பு உறுதிபடுத்தப்படும் என்றார். மேலும் இன்று தூத்துக்குடி-யில் நடைபெற்ற தேர்தல் அறிக்கை குழுவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இன்று நடந்த கூட்டத்தில் முதலமைச்சர் மீது ஒரு நம்பிக்கையோடும் மத்தியில் ஒரு ஆட்சி மாற்றம் வர வேண்டும், மத்திய அரசு ஒரு நல்ல அரசாக, மக்களை மதிக்க கூடிய அரசாக, மாநில உரிமைகளின் மீது நம்பிக்கை வைக்கக் கூடிய ஒரு அரசாக வரவேண்டும் என்ற அந்த எதிர்ப்பு எதிர்பார்ப்போடு தான் இன்று வந்தனர். மக்களுக்கு சிக்கல்கள் அதிகம் இருக்கிறது.
உதாரணமாக ஜிஎஸ்டியிலேயே பல குழப்பங்கள் உள்ளது. அதே நேரத்தில் மாநில உரிமைகளை மதிப்பதில்லை. தூத்துக்குடி மற்றும் சென்னையில் ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ள பாதிப்பிற்கு பிறகு கூட மத்திய அரசு எந்த நிதி உதவியும் செய்யவில்லை இப்படிப்பட்ட சூழ்நிலையில் மக்கள் ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்ற உறுதியோடு, அந்த வரவேற்போடு இன்று எங்களிடம் வந்து கோரிக்கைகளை தந்தனர் என்றார்
