காணொளி காட்சி வாயிலாக முதல்வர் அமைச்சர்களுடன் ஆலோசனை

காணொளி காட்சி வாயிலாக முதல்வர் அமைச்சர்களுடன் ஆலோசனை

காணொளி வாயிலாக ஆலோசனை நடத்திய முதல்வர்

காணொளி காட்சியின் வாயிலாக தேர்தல் குழு மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தினர்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு திமுகவை தயார்படுத்தும் விதமாக, திமுகவின் தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக ஸ்டாலின் அவர்கள் அமைத்துள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்புக்குழு சார்பில், கடந்த ஒரு வாரமாக தொகுதிவாரியாக கழக நிர்வாகிகளின் தேர்தல் பணிகளை ஆய்வு செய்து, தேர்தல் தொடர்பான அவர்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கேட்டு வருகின்றனர்.

இந்த கலந்தாலோசனைக் கூட்டங்கள் நாளையுடன் நிறைவடையவுள்ள சூழலில், முதலமைச்சர் அவர்கள், ஸ்பெயின் நாட்டிலிருந்து காணொளி காட்சி வாயிலாக இக்குழு மேற்கொண்டு வரும் பணிகளின் நிலை - திமுக நிர்வாகிகள் கூறிய கருத்துகள், அடுத்தகட்ட பணிகள் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்‌. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்பு

Tags

Next Story