110 விதியின் கீழ் முதல்வர் அறிவிப்பு !

110 விதியின் கீழ் முதல்வர் அறிவிப்பு !

மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 20 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 10000 கிலோமீட்டர் தமிழநாட்டில் உள்ள கிராம ஊராட்சி சாலைகள் ரூபாய் 4000 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நகரம் என்ற வேறுபாடு இல்லாமல் சாலை மேம்பாட்டை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. தமிழ்நாட்டில் சுமார் ஒரு லட்சத்து 38 ஆயிரம் கிலோ மீட்டர் நீளமுள்ள கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய சாலைகள் உள்ளன. கிராம சாலைகள், கிராம மக்கள் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக உள்ளது.

ஏற்கனவே, கிராம ஊராட்சி சாலைகளை மேம்படுத்த 4,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் மூலம் தற்போது வரை 8 ஆயிரத்து 120 கிலோமீட்டர் நீளமுள்ள ஊரக சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. அடுத்த இரண்டு ஆண்டுகளில் முதல்வரின் கிராமசாலை திட்டத்தின் மூலம் கூடுதலாக மேலும் பத்தாயிரம் கிலோ மீட்டர் கிராம சாலைகள் 4,000 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

Tags

Next Story