முதல் அமைச்சரின் சிறப்பு காப்பீட்டு திட்ட பதிவு முகாம்

X
முதல் அமைச்சரின் சிறப்பு காப்பீட்டு திட்ட பதிவு முகாம்
King 24x7 Web |3 Dec 2023 8:42 AM ISTபொதுமக்கள் அதிக அளவில் ஆர்வமுடன் பங்கேற்றனர்
சேலம் மாவட்ட சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் பானுமதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் சிறப்பு காப்பீட்டு திட்ட பதிவு முகாம் நடந்தது. இந்த முகாம் வாழப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அம்மாப்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது. இதுவரை முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை பெறாதவர்கள் இந்த முகாமுக்கு நேரில் தங்களது குடும்ப அட்டை, ஆதார் அட்டைகளின் அசல் மற்றும் நகல் ஆகியவற்றை கொண்டு சென்று பதிவு செய்து கொண்டனர்
Next Story
