ஊட்டி மலர் கண்காட்சியை தலைமை செயளாலர் ஷிவ்தாஸ் மீனா தொடங்கி வைத்தார்!
சர்வதேச சுற்றுலாத்தலமான நீலகிரியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஒவ்வொரு ஆண்டு தோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு மலர் கண்காட்சி 17-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் முன்கூட்டியே பத்தாம் 10-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது. இந்நிலையில் பிரசித்தி பெற்ற மலர் கண்காட்சி ஊட்டி அரசுத் தாவரவியல் பூங்காவில் இன்று தொடங்கியது. தமிழக அரசுத் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா தொடங்கி வைத்தார். வேளாண் துறை உள்பட பல்வேறு துறைகள் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள அரங்குகள் மற்றும் பழங்குடியின, திபெத்தியன் நடனங்களை கண்டு ரசித்தார். இந்த கண்காட்சியில் சிறப்பம்சமாக பிரெஞ்சு மேரி கோல்ட் உள்பட பல்வேறு மலர்கள் அடங்கிய 60 ஆயிரம் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. 326 ரகங்களில் 12 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு உள்ளது. சுமார் 1 லட்சம் மலர்களைக் கொண்டு குழந்தைகளை கவரும் வகையில் டிஸ்னி வேர்ல்ட் உருவம், மிக்கி மவுஸ் ஆகியவை காட்சிபடுத்தப்பட்டிருந்தன.
ஒரு லட்சம் மலர்களால் சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையிலும், யுனெஸ்கோவின் பாரம்பரிய அந்தஸ்து பெற்ற நீலகிரி மலை ரெயில் சப்தம் வரும் வகையில் தத்ரூபமாக உருவாக்கப்பட்டிருந்தது. இதே போல் பூங்காவின் பல பகுதிகளில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேனீ, முயல், பிரமிடு உள்ளிட்ட உருவங்களும் சுற்றுலா பயணிகளை கவர்ந்தது. விழாவில் வேளாண் உற்பத்தி ஆணையாளரும் முதன்மைச் செயலாளருமான அபூர்வா, வேளான் துறை இயக்குனர் முருகேஷ், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் குமாரவேல் பாண்டியன், நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா, கூடுதல் ஆட்சியர் கவுசிக், காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல், மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி, தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சிபிலா மேரி, உதவி இயக்குனர் பாலசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஊட்டி மலர் கண்காட்சி வருகிற 20-ந் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது. இந்த 11 நாட்களிலும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. சுற்றுலா பயணிகள் காலை 7 மணி முதல் மலை 7 மணி வரை மலர் கண்காட்சியை பார்வையிடலாம். மலர் கண்காட்சியை ஒட்டி சுமார் 600 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் மலர் கண்காட்சியின் முதல் நாளான நேற்று மாலை சுமார் 7 மணியளவில், முதன்முறையாக லேசர் லைட் ஷோ நடைபெற்று சுற்றுலா பயணிகளை கவர்ந்தது. இதே நிகழ்ச்சி கடைசிநாளன்றும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. ........