ஜெயங்கொண்டம் அருகே மாணவிகளிடம் சில்மிஷம்: உடற்கல்வி ஆசிரியருக்கு வலை

ஜெயங்கொண்டம் அருகே மாணவிகளிடம் சில்மிஷம்: உடற்கல்வி ஆசிரியருக்கு வலை

காவல் நிலையம் 

ஜெயங்கொண்டம் அருகே அரசு பள்ளி மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட பகுதி நேர உடற்கல்வி ஆசிரியரை அனைத்து மகளிர் போலீசார் தேடி விசாரித்து வருகின்றனர் .

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அண்ணாநகரைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரது மகன் கர்ணன் (36) இவர் இரவாங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பகுதி நேர உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர் அப்பள்ளியில் எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு கராத்தே பயிற்சிகள் கற்றுக் கொடுப்பதாக கூறி 20-க்கும் மேற்பட்ட சிறுமிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்தப் பள்ளியில் ஒரு சிறுமி 1098 - க்கு புகார் அளித்ததாக கூறப்படுகிறது. புகாரின் பேரில் குழந்தைகள் நல களப்பணியாளர் வீரமணி தலைமையிலான குழுவினர் பள்ளியில் சென்று விசாரணை செய்து,

இதுகுறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில்.போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, தலைமறைவாக உள்ள கர்ணனை தேடி விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் இரவாங்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story