வள்ளிமலை கோவிலில் சித்ரா பவுர்ணமி சிறப்பு வழிபாடு!

வள்ளிமலை கோவிலில் சித்ரா பவுர்ணமி சிறப்பு வழிபாடு!

காட்பாடி வள்ளிமலை கோவிலில் சித்ரா பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.


காட்பாடி வள்ளிமலை கோவிலில் சித்ரா பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு மலைக் கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து மலை அடிவாரத்தில் தனி சன்னதியில் வீற்றிருக்கும் வள்ளி அம்மைக்கு விசேஷ அபிஷேக ஆராதனை நடந்தது.

பின்னர் கீழ் கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகசுவாமிக்கு விசேஷ அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு விபூதி காப்பு அலங்காரம்,மகா தீபாராதனை நடந்தது. இதில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என கோஷமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.

வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருப்பதால் கோவில் நிர்வாகம் சார்பாக பக்தர்களுக்கு மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. சிறிய தேர் உட்பிரகாரத்தில் வலம் வந்தது. தொடர்ந்து உற்சவ மூர்த்திகளான வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. பஜனை குழுவினர் மற்றும் பக்தர்கள் வள்ளிமலையை சுற்றி கிரிவலம் வந்தனர்.

Tags

Next Story