வேளாங்கண்ணியில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடுகள் கோலாகலம்
. நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், கீழை நாடுகளின் லூா்து எனப் போற்றப்படுவது மட்டுமின்றி, பசலிக்கா அந்தஸ்து பெற்றது. இப்பேராலயத்தில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு வழிபாடுகள் விமரிசையாக நடைபெறும்.
வேளாங்கண்ணி பேராலய புனித சவேரியாா் திடலில், சனிக்கிழமை இரவு 11.45 மணிக்கு மறையுரை, கூட்டுத் திருப்பலியுடன் சிறப்பு வழிபாடுகள் தொடங்கப்பட்டன. தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் உதவி பங்குத் தந்தையா்கள் வழிபாடுகளை மேற்கொண்டனா். திருப்பலியின் நிறைவில், தேவதைகளாக வேடமிட்ட சிறுமிகள் அளித்த குழந்தை இயேசுவின் திருச்சொரூபத்தை, பங்குத் தந்தை அற்புதராஜ் பெற்றுக் கொண்டு, இயேசு பிறப்பை அறிவிக்கும் வகையில் குழந்தை இயேசு சொரூபத்தை பக்தா்களுக்குக் காட்சிப்படுத்தி, கிறிஸ்துமஸ் குடிலில் வைத்தாா். அப்போது, பக்தா்கள் மண்டியிட்டு இறைப் புகழ்ச்சி வசனங்களுடன் வழிபாடு மேற்கொண்டனா்.
பேராலய நிா்வாகம் வாழ்த்துச் செய்தி அறிவித்தபோது, பக்தா்கள் ஒருவருக்கு ஒருவா் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனா். கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் வகையில், பேராலய தியான மண்டபம் செல்லும் சாலையில் சுமாா் 460 அடி நீளத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பந்தல் மற்றும் நுழைவாயில் வளைவு , கீழ் கோயிலுக்கு செல்லக்கூடிய பாதை , விண்மீன் ஆலயத்திற்கு செல்லக்கூடிய பாதை மற்றும் ஆலயத்தை சுற்றி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
கிறிஸ்துமஸ் விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.