அரியலூர் அரசுப் பள்ளியில் தூய்மைப் பணி

அரியலூர் அரசுப் பள்ளியில் தூய்மைப் பணி

தூய்மைப் பணி

அரியலூரில் அரசுப் பள்ளியில் தூய்மைப் பணி மேற்கொண்டனர்.
பள்ளிகள் திறக்கப்படவுள்ளதை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்திலுள்ள பெரும்பாலன அரசுப் பள்ளிகளில் தூய்மைப் பணிகள் நடைபெற்று வருகிறது. கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 6 ஆம் தேதி திறக்கப்படுகிறது. இதற்காக அரியலூர் மாவட்டத்தில் கடந்த ஒன்றரை மாதங்களாக பூட்டிக் கிடந்த பள்ளிகளில், படிந்திருந்த தூசிகள், குப்பைகள் உள்ளிட்டவைகள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் சிறுவளூர் அரசுப் உயர்நிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியர் சின்னதுரை மேற்பார்வையில், தூய்மைப் பணியாளர்கள் இளஞ்சியம், கற்பகம், கனகா, மின்னல்கொடி உள்ளிட்டோர் பள்ளி வளாகங்களை தூய்மைப் படுத்தினர். வகுப்பு அறைகள், அலுவலகங்கள், குடிநீர் தொட்டி உள்ளிட்டவைகளில் கிடந்த குப்பைகள், தூசிகளை அகற்றி அனைத்தையும் கழுவினர். படவிளக்கம்: சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், தூய்மைப் பணியில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள்.

Tags

Next Story