மூடப்பட்ட உதகை பெரணி இல்லம், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள பெரணி இல்லம் மூடப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்து திரும்புகின்றனர்.

நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டிற்கு 30 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் உதகை அரசு தாவரவியல் பூங்காவை காண அதிக ஆர்வம் காட்டுகின்றனர். பூங்காவில் உள்ள பெரணி இல்லம், கண்ணாடி மாளிகை, இத்தாலியன் பூங்கா, கள்ளிச்செடி மாளிகை, கிக்யூ புல்வெளி ஆகியவற்றை பார்த்து ரசித்து செல்கின்றனர். குறிப்பாக 1894 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பெரணி இல்லத்தில் 1500 தொட்டிகளில் பெரணிகள் காட்சிக்கு வைக்கபட்டுள்ளது. இதில் 22 அரிய வகையை சேர்ந்தவை. 1500 பெரணி தாவர வகைகள் ஒரே இடத்தில் பார்க்க சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் பழைமையான பெரணி இல்லத்தின் மேற்கூரையில் உள்ள கண்ணாடிகள் அடிக்கடி உடைந்து கீழே விழுகிறது. பகல் நேரங்களில் கண்ணாடிகள் திடீரென கீழே விழுவதால் சுற்றுலா பயணிகளுக்கு காயமும் ஏற்படும் சூழல் ஏற்ப்பட்டு வருகிறது. கூரை பகுதி மோசமாக இருப்பதால் முன்னெச்சரிக்கையாக பெரணி இல்லத்தை பூங்கா நிர்வாகம் மூடியுள்ளது. பெரணி இல்லம் கடந்த இரண்டு மாதங்களாக மூடப்பட்டுள்ளதால் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story