புதுக்கோட்டையில் அரசு பல் மருத்துவ கல்லூரி - முதல்வர் திறப்பு

புதுக்கோட்டையில் அரசு பல் மருத்துவ கல்லூரி - முதல்வர் திறப்பு
பல் மருத்துவக் கல்லூரியை திறந்து  வைத்த முதல்வர்
புதுக்கோட்டையில் தமிழகத்தின் மூன்றாவது அரசு பல் மருத்துவக்கல்லூரியை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
புதுக்கோட்டையில் 67.83 கோடி செலவில் புதிய அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் 8.89 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பொது சுகாதாரத் துறை கட்டிடங்களை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார். புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நல துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி மற்றும் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் முத்துராஜா , மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா உள்ளிட்ட ஏராளமான அரசு அதிகாரிகள் பல் மருத்துவ மாணவ,மாணவியர் உள்ளிடோர் கலந்து கொண்டனர்

Tags

Next Story