சாலை விபத்து, பணியின்போது உயிரிழந்த சப்-இன்ஸ்பெக்டர், கண்டக்டர் குடும்பத்துக்கு நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சாலை விபத்து, பணியின்போது உயிரிழந்த சப்-இன்ஸ்பெக்டர், கண்டக்டர் குடும்பத்துக்கு நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஸ்டாலின் 

சாலை விபத்து, பணியின்போது உயிரிழந்த சப்-இன்ஸ்பெக்டர், கண்டக்டர் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சாலை விபத்து, பணியின்போது உயிரிழந்த சப்-இன்ஸ்பெக்டர், கண்டக்டர் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்துவந்த சுப்பையா (வயது 57) என்பவர் கடந்த 21.10.2024 அன்று பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று (25.10.2024) உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன். காவல் உதவி ஆய்வாளர் திரு. சுப்பையா அவர்களின் மறைவு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். காவல் உதவி ஆய்வாளர் சுப்பையாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவருடன் பணியாற்றும் காவல் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். சென்னை வியாசர்பாடி பணிமனை பேருந்து எண். VYJ 1399, மகாகவி பாரதியார் நகரில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் நோக்கி சென்றுகொண்டிருந்த மாநகரப் பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றிவந்த ஜெ.ஜெகன் குமார் (பணி எண்.C52200) பயணி ஒருவருடன் ஏற்பட்ட வாய்தகராறின் போது அப்பயணி தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்து வமனைக்கு கொண்டு செல்லும் வழியில் நேற்று இரவு உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியறிந்து மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன். உயிரிழந்த அரசு மாநகரப் பேருந்து நடத்துனர் ஜெகன் குமாரின் குடும்பத்தினருக்கும் அவருடன் பணியாற்றும் பணியாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்த நடத்துநர் ஜெகன்குமாரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

Tags

Next Story