72-வது பிறந்தநாள்; அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் மரியாதை!!

72-வது பிறந்தநாள்; அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் மரியாதை!!
X

CM Stalin

சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் 2025-26 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்களுக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைதொடர்ந்து சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் துணை முதலமைச்சர், எம்.பி. டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு உடன் இருந்தனர். இந்தி திணிப்பை எதிர்ப்போம் என உறுதிமொழி எடுக்கப்பட்டது. tஇதையடுத்து சென்னை வேப்பேரியில் பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

Tags

Next Story