கவிஞர் மு.மேத்தா, பாடகி சுசீலாவுக்கு "கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர்" விருதுகளை வழங்கினார் மு.க.ஸ்டாலின்!!

கவிஞர் மு.மேத்தா, பாடகி சுசீலாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகளை வழங்கினார் மு.க.ஸ்டாலின்!!

Stalin award

சென்னை தலைமைச்செயலகத்தில் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதினை கவிஞர் முகமது மேத்தா, பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவினைப் போற்றிடும் வகையில் கவிஞர் மேத்தா, பின்னணிப் பாடகி பி. சுசீலா ஆகியோருக்கு, கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது. இந்நிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதினை கவிஞர் முகமது மேத்தா, பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பாடகி சுசிலாவுக்கு விருதை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். இதனைத்தொடர்ந்து அர்ச்சகர்களின் குழந்தைகளுக்கு உதவித்தொகையை முதலமைச்சர் வழங்கினார். 500 மாணவர்களுக்கு மொத்தமாக ரூ.50 லட்சம் கல்வி உதவித்தொகையை வழங்கினார்.

Tags

Next Story