கலைஞர் குறித்த 100 நூல்களை வெளியிட்ட முதலமைச்சர் மு. க.ஸ்டாலின்
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கலைஞர் தமிழாய்வு இருக்கை சார்பில் 100 நூல்கள் வெளியிட்டு விழா நடைபெற்றது தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்துகொண்டு நூல்களை வெளியிட்டார்.
கலைஞரின் தமிழ் வழி கல்விக்கனவு, கலைஞர் படைப்புலகம், கலைஞரும் வள்ளுவரும், கலைஞர் கண்ட அய்யனும் அடிகளும், கலைஞரின் கவிதை மழையில் நனைந்தேன் உள்ளிட்ட 100 விதமான தலைப்புகள் கொண்ட நூல்கள் வெளியிடப்பட்டன. தமிழ் ஐயா வெளியீட்டகம் சார்பில் திருவையாறு பதிப்பாளர் மு கலைவேந்தன் பதிப்பகம் சார்பில் இந்த புத்தகங்கள் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, பிரபாகர் ராஜா, திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி, செய்தி தொடர்பு தலைவர் டி கே எஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.