அதிமுகவின் குடுமிடி இப்போது பாஜக கையில் உள்ளது் - முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஈரோட்டில் நடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு ஈரோடு வேட்பாளர் கே.இ.பிரகாஷ் , கரூர் வேட்பாளர் ஜோதிமணி நாமக்கல் வேட்பாளர் மாதேஸ்வரன் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின் , கலைஞரின் குருகுலத்திற்கு வந்துள்ளதாகவும் , நாடு காக்கும் ஜனநாயக போர்களத்திற்கு அழைப்பு விடுக்க வந்துள்ளேன் என்றார். திமுக திட்டங்களை குறை செல்வதாக கூறி மக்கள் திட்டங்களால் பயன்பெறும் மக்களை குறை கூறி அதிமுக , பாஜக அவதூறு குதிரையில் பயணம் செய்கின்றனர் என்றார். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் தொழில்கள் இழுத்து மூடப்படும் என்றும் மஞ்சளை உணவுப்பட்டியலில் சேர்த்தால் GST போட முடியாது என்பதால்உணவுப்பட்டியலில் மத்திய அரசு சேர்க்கவில்லை என்றார். பாஜக வழிகாட்டுதலில் அதிமுக செயல்படுவதாக குற்றம்சாட்டிய ஸ்டாலின் , எடப்பாடி பழனிசாமி ஒரு போதும் பாஜகவை விமர்சிக்க மாட்டார் காரணம் அதிமுகவின் குடுமிடி இப்போது பாஜக கையில் அது ஊழல் வழக்கு என்றார். ஜூன் 4 இந்தியாவின் 2 வது விடுதலை போராட்டம் என வரலாற்றில் பதியட்டும் என்றார்.