துணை முதல்வர் பதவி குறித்து முதலமைச்சர் தான் முடிவெடுப்பார்: உதயநிதி ஸ்டாலின்

துணை முதல்வர் பதவி குறித்து முதலமைச்சர் தான் முடிவெடுப்பார்: உதயநிதி ஸ்டாலின்

udhayanithi stalin

துணை முதல்வர் பதவி: முதலமைச்சர் தான் முடிவெடுப்பார் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

துணை முதலமைச்சர் பதவி குறித்து எந்த முடிவாக இருந்தாலும் முதல்வர்தான் எடுப்பார் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் முழுக்க முழுக்க அது முதல்வரின் முடிவு தான். என்னை துணை முதல்வராக்க வேண்டும் என தொண்டர்கள் சொல்வது அவர்களின் விருப்பம். தொண்டர்களின் விருப்பத்தை நேற்று தெரிவிக்கும் வகையில் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பேசியிருந்தார். எல்லா அமைச்சர்களுமே முதல்வருக்கு துணையாகதான் இருக்கிறோம். தமிழ்நாட்டில் பெரியாரை தொடாமல் யாரும் அரசியல் செய்ய முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக திமுக தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி பவள விழாவும், ஆண்டுதோறும் கொண்டாடப்படும் முப்பெரும் விழாவும் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று (17.09.2024) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மூலம் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் உரையாற்றினார். இதனையடுத்து தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், பெரியார் விருதுகளை வழங்கினார். இதனையடுத்து செம்படம்பர் 28ஆம் தேதி காஞ்சிபுரத்தில் திமுக பவள விழா பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த கூட்டம் தொடர்பாக திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அக்கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் பவள விழா பொதுக் கூட்டத்திற்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த பொதுக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒரே மேடையில் உரையாற்றுவதற்கான ஏற்பாடுகள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என். நேரு, எ.வ. வேலு, பொன்முடி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, திமுக பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பி., திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி., திருச்சி சிவா எம்.பி., உள்ளிடோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story