விரைவில் கடலோர காவல்படை விமானத் தளம்: டிஐஜி தகவல்

விரைவில் கடலோர காவல்படை விமானத் தளம்: டிஐஜி  தகவல்

தூத்துக்குடியில் விரைவில் கடலோர காவல்படை விமானத் தளம் அமைக்கப்படும் என கடலோர காவல்படை டிஐஜி டி.எஸ்.சவுகான் கூறினார்.

தூத்துக்குடியில் விரைவில் கடலோர காவல்படை விமானத் தளம் அமைக்கப்படும் என கடலோர காவல்படை டிஐஜி டி.எஸ்.சவுகான் கூறினார்.

தூத்துக்குடியில் விரைவில் கடலோர காவல்படை விமானத் தளம் அமைக்கப்படும் என்று கடலோர காவல்படை டிஐஜி டி.எஸ்.சவுகான் கூறினார்.

இதுகுறித்து அவர் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்திய கடலோரக் காவல் படையின் கிழக்கு பிராந்தியம் சாா்பில் ஆண்டுக்கு ஒரு முறை கடலில் தேடுதல் மற்றும் மீட்பு ஒத்திகை பயிற்சி நடத்தப்படும். அதன்படி, தற்போது தூத்துக்குடி கடல் பகுதியில் தேடுதல் - மீட்பு ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டுள்ளது. இந்திய கடலோர காவல் படை மூலம் கடந்த 2023ஆம் ஆண்டு கடலில் தத்தளித்த ஆயிரத்துக்கு மேற்பட்டோா் மீட்கப்பட்டுள்ளனா்.

கடல் பகுதியில் போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில் இதுபோன்ற ஒத்திகை பயிற்சி கடலில் ஆபத்தில் சிக்குவோரை மீட்பதற்கு பெரிதும் உதவியாக இருக்கும். எந்த நாட்டை சோ்ந்தவா்கள் கடலில் ஆபத்தில் சிக்கினாலும் அவா்களை மீட்டு, உயிரை காப்பாற்றுவது கடலோரக் காவல்படையின் கடமை.

Coast Guard Air Base Soon: Information from DIGஇந்திய கடலோர காவல் படை சாா்பில் தூத்துக்குடியில் விரைவில் விமானத் தளம் அமைக்கப்படும். இது, தென் தமிழக கடலோர பகுதிகளில் மீட்பு - பாதுகாப்புப் பணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ரோந்து பணியின்போது பிடிபடும் கடத்தல்காரா்களிடம் போதைப் பொருள்கள், தங்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. ராமேஸ்வரம் பகுதியில் கடந்த ஓராண்டில் சுமாா் 40 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றாா்.

Tags

Next Story