சிட்கோ தொழிற்பேட்டை அமைக்க காயர் உற்பத்தியாளர்கள் கோரிக்கை 

சிட்கோ தொழிற்பேட்டை அமைக்க காயர் உற்பத்தியாளர்கள் கோரிக்கை 
பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்த காயர் உற்பத்தியாளர்கள்
பேராவூரணியில், சிட்கோ தொழிற்பேட்டை அமைத்து தர காயர் உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பேராவூரணி காயர் மற்றும் காயர் உற்பத்தி தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கம் சார்பில், ஒன்றிய அரசு, தமிழ்நாடு அரசுக்கு, சங்கத்தின் தலைவர் கே.ஆர்.கோவிந்தராஜன், செயலாளர் பி.வி.முகுந்தன், பொருளாளர் ஏ.ரஷீத் மற்றும் சங்க நிர்வாகிகள் 50 க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டு, தென்னை நார் தொழில் மேம்பாடு தொடர்பாக கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். அ

ம்மனுவில் கூறியிருப்பதாவது, தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தொகுதியில் சுமார் 30,000 ஏக்கரில் 15,000 விவசாயிகளால் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. இதிலிருந்து உற்பத்தியாகும் தேங்காய் மட்டைகளை மூலப்பொருளாக கொண்டு 82 காயர் உற்பத்தி தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது.இதில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 4,000 குடும்பங்கள் வேலை செய்து பயனடைகின்றனர்.

மேலும், மத்திய அரசிற்கு காயர் பொருட்கள் ஏற்றுமதி மூலம் கிடைக்கும் அந்நிய செலாவணியில் சுமார் 10 விழுக்காடு பங்களிப்பு செய்கிறது. தற்போது உள்ள சூழ்நிலையில் மின் கட்டண உயர்வு காரணமாக இத்தொழிலை நடத்த முடியாத சூழ்நிலைக்கு தள்ளிவிட்டது. மத்திய, மாநில அரசுகள் தொழில் மேம்பாட்டுக்கு உதவி செய்தால் மட்டுமே இத்தொழில் தொடர்ந்து நடைபெறும்.

கோரிக்கைகள் : மத்திய அரசின் காயர் வாரியத்தின் மூலம் பொதுவான சேமிப்பு கிடங்கு ஒன்று சுமார் 30,000 சதுர அடியில் கட்டித்தர வேண்டும். இதன்மூலம் இங்கு உற்பத்தி செய்யப்படும் தேங்காய் நார் பஞ்சு, காயர் பித் கட்டிகளை இருப்பு வைத்து நல்ல விலைக்கு விற்று இலாபம் ஈட்ட வழி கிடைக்கும். தென்னை காயர் வாரியத்தால் ஏற்றுமதி குறித்த பயிற்சி மற்றும் மதிப்பு கூட்டும் பயிற்சி 6 மாதங்களுக்கு ஒருமுறை நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். விசைத்தறிகளுக்கு பயன்படுத்தும் மின்சாரத்திற்கான கட்டணத்தில் கட்டணச் சலுகை வழங்கப்படுவது

போல கயிறு தொழிற்சாலைகளுக்கும் மின்சார மானியம் வழங்க வேண்டுகிறோம். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் மூலம் இயந்திரங்கள் வாங்குவதற்கு கடன் பெற்றுள்ளோம். தற்சமயம் உள்ள சூழ்நிலைகளால் வருமானம் இல்லாத நிலை உள்ளதால் தவணை தொகையினை திரும்பக் கட்ட இயலவில்லை. ஆகையால் கடன் தொகையை திரும்பக் கட்டும் கால நிர்ணயத்தை நீட்டித்துதர ஒன்றிய அரசு ஆவண செய்யுமாறு கேட்டுக்கோள்கிறோம்.

பேராவூரணி பகுதியில், மழைக்காலங்களில் சுமார் 3 மாதம் (அக்டோபர், நவம்பர், டிசம்பர்) உற்பத்தி செய்யப்படும் தேங்காய் நார் பஞ்சு மற்றும் இதர உற்பத்தி பொருட்களை காய வைப்பதற்கு உலர் களங்கள் போன்ற வசதி இல்லை. எனவே, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் கடன் வழங்கியும், அதற்கு மத்திய காயர் வாரியத்தின் மூலம் 50 விழுக்காடு மானியம் வழங்கவும் வேண்டும். பேராவூரணி பகுதி மிகவும்

பிற்படுத்தப்பட்ட பகுதி இப்பகுதி மக்கள் சிறுதொழில் செய்து பிழைப்பதற்கு சிட்கோ தொழிற்பேட்டை அமைத்து தர ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்" இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story