வாக்கு எண்ணும் மையத்தில் தலைமைத் தேர்தல் அலுவலர் ஆய்வு
ஆட்சியர் ஆய்வு
தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு, மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தலைமையில் தேர்தல் பணிகள் குறித்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (13.05.2024), வருகின்ற 04.06.2024 அன்று நடைபெற உள்ள தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் பணிகள் தொடர்பாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு அலுவலர்களுடன் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர்/அரசு முதன்மைச் செயலாளர் சத்யபிரதா சாகு, மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தலைமையில் ஆய்வு மேற்கொண்டார்கள். இந்தஆய்வின்போது, தூத்துக்குடி பாராளுமன்ற பொதுத்தேர்தலில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் அவர்களால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் மாவட்ட தேர்தல் அலுவலரால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் திருப்தி அளிப்பதாகவும், சிறப்பாகவும் உள்ளது என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர்/அரசு முதன்மைச் செயலாளர் சத்யபிரதா சாகு, தெரிவித்தார்.
Next Story