தேர்தல்பணியில் முன்னாள் ராணுவ வீரர்கள் பதிவுசெய்ய கலெக்டர் வேண்டுகோள் !
கலெக்டர் வளர்மதி
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட விருப்பமுள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் பதிவு செய்யலாம் என ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல்-2024 பாதுகாப்பு பணியில் முன்னாள் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள். எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சார்ந்த 65 வயதிற்கு உட்பட்ட விருப்பமுள்ள இளநிலை படை அலுவலர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்கள் வேலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை அனைத்து நாட்களிலும் (சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை உள்பட) நேரில் அணுகலாம். மேலும், அலுவலக தொலைபேசி எண்- 0416-2977432 மூலமாக தங்களது விருப்பத்தினை தெரிவித்து கொள்ளலாம் என ராணியப்பெட்டை கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
Next Story