மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான கல்லூரி விடுதி: திறந்து வைத்த முதல்வர்

குமாரபாளையத்தில் ரூ. 2 .16 கோடி மதிப்பில் மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவர்களுக்கான தங்கும் விடுதியினை முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி மூலம் திறப்பு

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு கல்வியியல் கல்லூரி அருகில் தமிழக அரசு சார்பில், அரசினர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவர்களுக்கான தங்கும் விடுதி இரண்டு கோடியே 16 லட்சம் ரூபாய் செலவில் 100 மாணவர்கள் தங்கக்கூடிய வகையில் புதிதாக முதல் தளம் மற்றும் இரண்டாம் தளம் என 885 ச.மீ. அளவில் கட்டப்பட்டுள்ளது. இதில் மின்னனு நூலகம், உடற்பயிற்சி கூடம், உணவுக்கூடம் அனைத்து வசதிகளுடன் கூடிய வகையில் கட்டப்பட்ட கட்டிடத்தினை முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

அதன் பின் விடுதி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சின்ராஜ் ஆகியோர் குத்து விளக்கேற்றினர். பின்னர் விடுதி வளகத்தினை ஆய்வு செய்தனர். இந்த நிகழ்வின் போது நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில், குமாரபாளையம் நகர மன்ற தலைவர் விஜய கண்ணன், விடுதி காப்பாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story