கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி

X
கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி
காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
சேலம் தாதகாப்பட்டி மூணாங்கரட்டைச் சேர்ந்தவர் மோகன்குமார். இவரது மகள் சுருதி (வயது 19). இவர் சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம்., சி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் சாணி பவுடரை குடித்து விட்டு மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மாணவியை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று மாணவி மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து மாணவி தற்கொலைக்கு முயன்றதற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
