ஆவின் நிறுவனத்திற்கு போட்டியா !! அமுல் பால் விற்பனையை தொடங்குவதாக தகவல் !!!

ஆவின் நிறுவனத்திற்கு போட்டியா !! அமுல் பால் விற்பனையை தொடங்குவதாக   தகவல் !!!

பால் விற்பனை

தமிழ்நாட்டில் அமுல் பால் விற்பனை செய்யப்படவில்லை என பால்வளத்துறை தெரிவித்துள்ளது. தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யும் பணியில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையம் ஈடுபட்டு வருகிறது.

ஆவின் நிறுவனம் வாயிலாக தினமும் 30 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் செயல்படுவது போல அமுல் நிறுவனமானது குஜராத் மாநிலத்தை தலைமையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

பால் பாக்கெட் மூலம் தமிழ்நாட்டில் அமுல் நிறுவனம் விற்பனையை தொடங்க உள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது இந்நிலையில் தற்போது மீண்டும் இரண்டு மாதங்களில் தமிழ்நாட்டில் அமுல் நிறுவனமானது பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்ய களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் ஆவின் நிறுவனத்துக்கும் அமல் நிறுவனத்துக்கும் போட்டி ஏற்படும் என்று ஆவின் நிறுவனத்தில் பால் கொள்முதல் அளவு குறையும் என்றுபேச்சுகள் ஆரம்பித்தன. அதேபோல் தமிழக நிறுவனத்தின் பால் பொருட்கள் தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

ஆனால் ஒரு மாநில பால் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு போட்டியாக மற்றொரு மாநில பால் பாக்கெட் விற்பனை செய்யப்படுவதில்லை. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பால் பாக்கெட் தொழிற்சாலையை அமுல் நிறுவனம் அமைத்து வருகிறது.

இங்கிருந்து பால் தயிர் பன்னீர் உள்ளிட்ட பொருட்களை தமிழக முழுவதும் விற்பனை செய்வதற்கான நடவடிக்கை 2023 முதல் தொடங்கியுள்ளது. இதற்கு தமிழக அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பால் கொள்முதலை அமுல் நிறுவனம் தொடங்கவில்லை.

ஆனால் கிருஷ்ணகிரியில் பால் பண்ணை கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்ற நிலையில் முதற்கட்டமாக ஆவினுக்கு போட்டியாக தயிர் பன்னீர் லேசி விற்பனை அமுல் நிறுவனம் வாயிலாக துவங்கி உள்ளது.

இதற்கான கிடங்கு செங்குன்றம் அருகே அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களில் சித்தூர் பால் பண்ணையில் இருந்து சென்னை திருவள்ளுர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் பால் பண விற்பனை துவங்குவதற்கு அமுல் முடிவு செய்துள்ளது என தகவல் வெளியானது.

இதற்கு பால்வளத் துறை மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் அமுல் நிறுவனம் பால் விற்பனையை தற்போது வரை தமிழகத்தில் தொடங்கவில்லை என பால்வளத்துறை தெரிவித்துள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story