பா.ஜ.கவிற்கு போட்டி நாம் தமிழர் கட்சியுடன் இல்லை - அண்ணாமலை

பா.ஜ.கவிற்கு போட்டி நாம் தமிழர் கட்சியுடன் இல்லை - அண்ணாமலை

அண்ணாமலை 

சீமானை யாரும் கண்டு கொள்வதில்லை, திரும்ப ஒரு அட்டென்சனுக்கு வரவேண்டும் யாரையாவது பிடிச்சு வம்புக்கு இழுக்க வேண்டும். முதல்நாள் அன்பு தம்பி என்பார் அடுத்த நாள் திட்டுவார். எனக்கும் சீமானுக்கும் என்ன சம்பந்தம்?. எங்களுடைய போட்டி நாம் தமிழர் கட்சியோட இல்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கவுந்தப்பாடியில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது மக்கள் எழுச்சியை பார்க்கும் போது திருப்பூர் பாராளுமன்ற தொகுதி இந்த முறை பாஜ பக்கம் என்பது ஒவ்வொரு நாளும் உறுதியாகி வருகிறது என்றார். பொது விவாதத்திற்கு சீமான் அழைப்பு விடுத்தது குறித்து அண்ணாமலை கூறும் போது, சீமான் இப்பொழுது தான் அந்த லெவலுக்கு வந்திருக்கிறாரா? சீமானை யாரும் கண்டு கொள்வதில்லை. திரும்ப ஒரு அட்டென்சனுக்கு வரவேண்டும் யாரையாவது பிடிச்சு வம்புக்கு இழுக்க வேண்டும். முதல்நாள் அன்பு தம்பி என்பார் அடுத்த நாள் திட்டுவார். எனக்கும் சீமானுக்கும் என்ன சம்பந்தம்? எங்களுடைய போட்டி நாம் தமிழர் கட்சியோட இல்லை.

அப்புறம் எதுக்கு பொது விவாதம்? ஏன் மேடையில் பேசணும்? என் மேடையில் நான் பேசுகிறேன். அவருக்கான மேடையில் அவர் பேசட்டும். மக்கள் இரண்டு பேரையும் பார்க்கட்டும்.மக்களுக்கு யார் பிடிக்கிறதோ அதை முடிவு செய்வார்கள். முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ குறித்து கூறும் போது, செல்லூர் ராஜூ வாயில் நல்ல வார்த்தை வந்தால் தானே. கெட்ட வார்த்தை தானே எப்பொதும் வருகிறது. நல்ல வார்த்தை பேசினால் மழை வரும். என்று நல்ல வார்த்தை பேசி இருக்கிறார்? அவருக்கு தோல்வி பயம்.அந்த கட்சி காணாமல் போய் கொண்டு இருக்கிறது. மக்கள் அந்த கட்சியில் இருந்து வெளியே வர ஆரம்பித்து விட்டனர். அந்த விரக்தியை என்மேல காட்டினால் நான் என்ன செய்ய முடியும் என்றார்.

Tags

Next Story