வேலூரில் தாமரை சின்னத்தில் போட்டி - ஏசி சண்முகம்
ஏசி சண்முகம்
நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தாமரைச் சின்னத்தில் போட்டியிடுகிறேன். வேலூர் தொகுதியில் மும்முனை போட்டியிருக்கும். வேலூரில் தாமரை மலர்ந்தே தீரும் என புதிய நீதி கட்சியின் தலைவர் ஏசி சண்முகம் தெரிவித்தார்.
சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் பாஜக மாநிலச் செய்தி தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ், மறைந்த தந்தையார் த.சி.க.கண்ணன் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு பின் பேட்டி அளித்த புதிய நீதி கட்சியின் தலைவர் ஏசி சண்முகம், நான் தாமரைச் சின்னத்தில் வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறேன். நாங்கள் கடந்த 6 மாதமாக வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் பணியை மேற்கொண்டு வருகிறோம். வேலூர் தொகுதியில் மும்முனை போட்டியிருக்கும். வேலூரில் தாமரை மலர்ந்தே தீரும். தேசிய கட்சியோடு கூட்டணி வைத்தால் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய கட்சிகளுக்கு எந்த பயனும் இல்லை என ஈபிஎஸ் சொன்னது குறித்த கேள்விக்கு? என்னென்ன பயன் கிடைத்தது என்பது அவருக்கே நன்றாக தெரியும். என்றார்.
Next Story