காவல்துறை தாக்கப்பட்டதாக புகார் : தேசிய குழந்தைகள் ஆணையம் நோட்டீஸ்

காவல்துறை தாக்கப்பட்டதாக புகார் : தேசிய குழந்தைகள் ஆணையம் நோட்டீஸ்

மாவட்ட ஆட்சியர்


மாணவர்களை காவல் துறையினர் தாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து, விசாரணை நடத்தி அறிக்கை அனுப்ப, மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் அருகே வல்லம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக சரண்யா என்பவர் பணியாற்றி வருகிறார். கடந்த ஆகஸ்ட். 7 ஆம் தேதி, பள்ளி மைதானத்தில் நடந்து வரும் போது, சரண்யாவின் தலையில் கல் விழுந்து காயமடைந்தார். மாணவர்கள் யாரோ ஒருவர் தான் தன் மீது கல்வீசியதாக கூறி, வல்லம் காவல்நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. மேலும், சரண்யா, லஞ்ச ஒழிப்புத் துறையில் ஆய்வாளராக பணியாற்றி வரும் தனது கணவரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, சீருடை அணியாமல் வந்த காவல்துறையினர், சில மாணவர்களிடம் விசாரணை நடத்தி விட்டு, அவர்களை தனி அறையில் வைத்து அடித்தாகவும், மாணவர்கள் யாரிடமும் சொன்னால், செய்முறை தேர்வில், மதிப்பெண்ணை குறைத்து விடுவதாக பள்ளி தரப்பில் மிரட்டப்பட்டதாகும் குற்றச்சாட்டு எழுந்தது.

இருப்பினும், மாணவர்களின் பெற்றோருக்கு தெரிய வர பள்ளியை முற்றுகையிட்டனர். அப்போது, ஆசிரியர்கள், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், பிரமுகர்கள் சிலர் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி பெற்றோர்களை சமாதானம் செய்தனர். இவ்விவகாரத்தில், 15 காவல்துறையினர் பள்ளியில் புகுந்து, 14 மாணவர்களை கணிணி ஆய்வக அறையில் வைத்து, தண்ணீர் கூட கொடுக்காமல், தாக்கியுள்ளனார் என பாதிக்கப்பட்டோர் தரப்பில் இருந்து தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு மனு ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், ஒரு வாரத்திற்குள்ளாக புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும் என ஆட்சியர் தீபக் ஜேக்கப்பிற்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடப்பதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story